கொங்கு வேளாளர் கொங்கு செழித்தால்…!!! எங்கும் செழிக்கும்…!!!
கொங்கு வேளாளர்
கொங்கு வேளாளர் (Kongu Vellalar) எனப்படுவோர் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர். பொதுவாக இவர்களை கவுண்டர் என்றும் கொங்கு சமுதாயம் என்றும் அழைப்பர். கவுண்டர் என்ற சொல் தற்போது சாதி அடையாளம் கொண்டு அறியப்பட்டாலும் அது எந்த சாதியையும் அடையாளப்படுத்தும் சொல் அல்ல. ஊர் பெரிய மனிதரை கவுண்டர் என்று அழைத்தனர். ஊரில் நிறைய பெரிய மனிதர்கள் இருந்தாலும் ஒருவரையே கவுண்டர் என்ற அடைமொழி கொடுத்து அழைத்தனர். அவரை ஊர் கவுண்டர் என்று அழைத்தனர். கொங்கு நாட்டுப் பகுதியில் ஊர் கவுண்டரை கொத்துக்காரர் என்றும் அழைப்பர். ஊரை உருவாக்கிய மரபைச்சேந்தவர்களையே இவ்வாறு சகல முதல் மரியாதைகளையும் கொடுத்து அழைக்கின்றனர். இது பெரும்பாலும் கொங்கு வெள்ளாள (கொங்கு வேளாளர்) கவுண்டர்களுக்கே உள்ளது. சங்க மன்னர்களான கொங்கர் (கங்கர்)களது நிருவாக முறையான கமுண்ட (காமிண்ட) முறை. கவுண்டர் என்ற சொல் காமிண்டன் என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது. காமிண்டன் என்றால் நிலத்தை, மக்களை, நாட்டை காப்பவன் என்று பொருள்.கொங்கு வேளாளர் கூட்டப் பிரிவுகள் (அல்லது குலப்பிரிவுகள்) இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் பங்காளிகள் சகலை முறை சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள், மற்ற குலத்தவர்கள் மாமன் முறை மைத்துனன் முறை சக உறவுடையவர் திருமண உறவுகள் இம்முறையில் திருமணம் செய்வார்கள்.
கவுண்டர்கள் வரலாறு
கொங்கு வேளாள கவுண்டர்களின் வரலாறு, கொங்கு வேளாளர்கள் அல்லது கொங்கு வேளிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளனர், மிக முக்கியமான தொழிலாக விவசாயத்தை அமைத்துக் கொண்டனர். விவசாயம் அல்லாது, தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்..
குலம் அல்லது கூட்டம் பட்டியல்
கூட்டப் பிரிவுகள் (அல்லது குலமக்கள்) தகப்பனார் வழி ஆண் வாரிசுகள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள், ஒரே குலத்தைச் சார்ந்தவர்கள் குணாதிசயம் பண்பாடு பாரம்பரியம் ஒரே மாதிரியாக அமைத்துக் இதன் காரணம் பங்காளிகள், ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தன்மையுடன் கொண்டிருக்கும் குலப்பிரிவுகள் ஒரே குலமக்கள் அவர்கள்.
குல தெய்வங்கள்
கொங்கு வேளாளர் வழிபாட்டு முறையில் முக்கியமான வழிபாட்டு முறைவம்சத்தை குலத்தைக் காப்பது குலதெய்வம் வழிபாட்டு முறையாக உள்ளது குலதெய்வ வழிபாடு முறைக்கு பின்னரே இஷ்டதெய்வ வழிபாடு குறை உள்ளது குலம் திருத்தலங்கள் முகவரி, கோத்திரம் –அடிப்படை விஷயங்கள்அனைவரும் கோயிலில் அர்ச்சனை செய்யும் போது என்ன குலம்னு கேட்டா 🌊🌊🌊கங்கா குலம் என்றும்.
குல குரு
குல குரு என்பவர் நமது குலம் காணி செழிக்க நமது வழிபாட்டு முறையை நடைமுறை நெறிமுறை படுத்தவும் நித்திய வழிபாடு செய்பவர்கள் குலகுரு குலம் தலைக்க முக்கியம் நமது சுபகாரியங்களுக்கு குல குருவின் ஆசி பெறுவது மிகச் சிறந்தது.
கொங்கு நாடு
கொங்குநாடு (Kongu Nadu) என்பது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு மண்டலம் ஆகும். இதை கொங்கு மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது கல்வெட்டுகள், செப்பேடுகள், மேலோலைகள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களைத் கொங்கு நாட்டில் பரவலாகக் காணலாம். இடைக்காலத் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் திகழ்ந்துள்ளது.
கொங்கு வேளாளர் சீர்கள்
கொங்கு வேளாளர் மரபுப்படி நிறைய சீர் முறைகள் உள்ளது சீர் செய்யும் அருமை காரர்கள் ஒரு சில விதிமுறைகள் பங்காளிகள் மட்டுமே செய்ய முடியும். அதில் பொதுவான சீர் முறைகள் மற்றும் மாமன் முறைகள் மற்றும் இதர சீர்கள் அனைத்தும் கொங்கு வேளாளர் அனைவரும் செய்யலாம்.
Contact Me
email@email.com
Chicago, US
512312311